ஏரியூர் அருகே வீட்டில் மின்கசிவால் பணம், நகை எரிந்து நாசம்

வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏரியூர் அருகே வீட்டில் மின்கசிவால் பணம், நகை எரிந்து நாசம்
Published on

ஏரியூர்:

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரலஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவரது மனைவி விஜயா (வயது55). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று விஜயா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.

இருந்த போதும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.

மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ. 7 லட்சம், 2 பவுன் தங்க நகை, வீட்டின் பட்டா , மற்றும் அவரது பேரக் குழந்தையின் சான்றிதழ்கள் எரிந்த நிலையில் இருந்தன. இதனை வீட்டிற்கு வந்து பார்த்த விஜயா கதறி அழுதார்.

தீ விபத்து குறித்து, விஜயாவின் வீட்டின் அருகே தாழ்வான மின் கம்பி செல்கிறது. மின் கசிவின் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரிகிறது.

கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள தாழ்வான மின் கம்பிகளை அப்புறப்படுத்தி சீர்செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com