மெட்ரோ ரெயில் பணி: போரூர்-குமணன்சாவடி வரை 2 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்

மவுண்ட் பூந்தமல்லி-ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பில் இருந்து குமணன்சாவடி சந்திப்பு வரையிலான போக்குவரத்தில் இலகுரக வாகனங்கள் செல்லவும் மற்றும் கனரக வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்தில் மாற்றம்
போக்குவரத்தில் மாற்றம்
Published on

சென்னை:

ஆவடி கமி‌ஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மவுண்ட் பூந்தமல்லி- ஆவடி நெடுஞ்சாலையில் போரூர் ஏரி சிவன் கோவில் சந்திப்பில் இருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை மெட்ரோ ரெயில் திட்ட பணிக்காக தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் 26.2.2022 (இன்று) மற்றும் 27.2.2022 (நாளை) தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சோதனை ஓட்டம் முறையிலும் பின்னர் மேற்படி போக்குவரத்து மாற்றம் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பணிக்காக திட்டமிடப்பட்டுள்ள தற்காலிக போக்குவரத்து மாற்றம் பின்வருமாறு:-

* மவுண்ட் பூந்தமல்லி- ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பில் இருந்து (போரூர் ஏரி சிவன் கோவில் அருகில்) குமணன்சாவடி சந்திப்பு வரையிலான போக்குவரத்தில், இலகுரக வாகனங்கள் (கார், ஜீப், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்) செல்லவும் மற்றும் கனரக வாகனங்கள் (வேன், டிரக், பஸ் மற்றும் வணிக வாகனங்கள்) மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்சுகளுக்கு விலக்கு அளித்து அவ்வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

* போரூரில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி-ஆவடி சாலையில் (எஸ்.எச் 55) பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலது புறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு-பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன் சாவடி, ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி, சவீதா பல் மருத்துவமனை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படும்.

* சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவீதா பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி- ஆவடி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவமணை, ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி, வேலப் பன் சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடது புறம் திரும்பி சமயபுரம் வழியாக போரூர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.

* பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.

* பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையாளரின் இணையதள முகவரியான dcpavadi.traffic@gmail.com மற்றும் கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான sundramoorthyb@kecrpg.com அனுப்பலாம்.

மேலும் பொதுமக்களது ஆலோசனைகளை ஆவடி காவல் ஆணையரகத்தின் டுவிட்டர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஆவடி போக்குவரத்து கைப்பேசி எண்: 8056217958-க்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com