கருங்காலி மாலை வாங்க சென்ற வாலிபர் மீது ஆசிட் வீச்சு

வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்காலி மாலை வாங்க சென்ற வாலிபர் மீது ஆசிட் வீச்சு
Published on

மானாமதுரை:

மானாமதுரையை அடுத்த கொன்னக்குளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், சிவகங்கையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கருங்காலி மாலை வாங்குவதற்காக மானாமதுரையில் உள்ள விஜய மார்த்தாண்டம், என்பவரது நகை கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, நகை பட்டறை உரிமையாளருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென, நகை பட்டறை உரிமையாளர் விஜய மார்த்தாண்டம், சதீஷ்குமார் மீது ஆசிட் வீசியதில், அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருங்காலி மாலை வாங்க சென்ற வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com