மதுராந்தகத்தில் ரெயில்களை நிறுத்தக்கோரி ரெயில் பயணிகள் திடீர் உண்ணாவிரதம்

ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும்.
மதுராந்தகத்தில் ரெயில்களை நிறுத்தக்கோரி ரெயில் பயணிகள் திடீர் உண்ணாவிரதம்
Published on

மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

இங்கிருந்து போதிய ரெயில்கள் இல்லை. ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் யூனிட் ரெயிலை மேல்மருவத்தூர் வரை காலை மாலை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையம் அருகே திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com