மதுரை ரெயில் தீ விபத்து குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பலரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி சட்டரீதியான விசாரணை நடத்த உள்ளார்.
மதுரை ரெயில் தீ விபத்து குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

மதுரையில் நேற்று அதிகாலை சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தீ விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி சட்டரீதியான விசாரணை நடத்த உள்ளார். மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

விபத்து குறித்து பொதுமக்களிடம் ஏதேனும் தகவல் அல்லது ஆதாரம் இருந்தால் அதை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கொடுக்கலாம். அல்லது ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர், தெற்கு வட்டம், 2-வது மாடி, சன்ராக்ஷா பவன், பெங்களூரு - 560 023 என்ற முகவரிக்கு கடிதம் வழியாகவும் தெரிவிக்கலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com