ஈபிஎஸ் அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும்- ஓபிஎஸ் ஆதரவாளர் வலியுறுத்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு.
ஈபிஎஸ் அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும்- ஓபிஎஸ் ஆதரவாளர் வலியுறுத்தல்
Published on

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தலை' செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், சட்ட ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் ஈபிஎஸ்க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com