கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா- இன்று மாலை சாகை வார்த்தலுடன் தொடங்குகிறது

மே 3-ந்தேதி மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.
கூத்தாண்டவர் கோவில் திருவிழா
கூத்தாண்டவர் கோவில் திருவிழா
Published on

திருநாவலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கூவாகம் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்கு சாகை வார்த்தலுடன் கூழ் ஊற்றி தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நாளான மே 1-ந்தேதி கம்பம் நிறுத்தல், 2-ந்தேதி இரவு சுவாமி கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்று கொள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே 3-ந்தேதி மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com