கேளம்பாக்கத்தில் வட மாநில வாலிபர் மீது தாக்குதல்- 3 பேர் கைது

தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. பலத்த காயம் அடைந்த அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கேளம்பாக்கத்தில் வட மாநில வாலிபர் மீது தாக்குதல்- 3 பேர் கைது
Published on

கேளம்பாக்கம் மாதா கோவில் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மொகரம் மண்டல் (40) உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள்பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று மாலை கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தின் அருகில் மொகரம் மண்டல் நின்று கொண்டு இருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த வாலிபர்கள் திடீரென மொகரம் மணடலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்டை, கல்லால் சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேளம்பாக்கம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த வினீத் , பிரவீன், விஷ்வாஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com