கரூரில் கர்நாடக ஐயப்ப பக்தர்கள் வாகனம் விபத்து

விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் கர்நாடக ஐயப்ப பக்தர்கள் வாகனம் விபத்து
Published on

கரூர்:

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேலம் பைபாஸ் சாலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு வந்து கொண்டிருந்த ஜீப் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முட்டை வாகனத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com