மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு
Published on

மதுரை:

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லிகைப் பூ கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை பூக்கள் கிலோ 2,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மெட்ராஸ் மல்லி கிலோ 2000 ரூபாய், சம்மங்கி, செவ்வந்தி ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.300-க்கும் விற்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com