எழும்பூரில் 18-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் இப்தார் விருந்து அளிக்கிறார்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகிற 18-ந்தேதி எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் இப்தார் விருந்து அளிக்க உள்ளார்.நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
எழும்பூரில் 18-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் இப்தார் விருந்து அளிக்கிறார்
Published on

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளுள் ஒன்றான நோன்பிருத்தல் கடைபிடிக்கப்படும் புனித மாதமான ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணி அளவில் சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் இப்தார் விருந்து அளிக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com