மாணவர்கள் போராட்டம் எதிரொலி... சென்னை மாநில கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.உயிரிழந்த மாணவர் சுந்தருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மெளன அஞ்சலி செலுத்தினர்.
மாணவர்கள் போராட்டம் எதிரொலி... சென்னை மாநில கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு
Published on

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு ரூட் தல விவகாரம் தொடர்பாக மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர் சுந்தர் மீத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பலத்த காயமடைந்த சுந்தர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர் சுந்தர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக சென்னை மாநில கல்லூரிக்கு இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உயிரிழந்த மாணவர் சுந்தருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மெளன அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com