சாலையில் ஏற்பட்ட பள்ளம்: நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர். சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சாலையில் ஏற்பட்ட பள்ளம்: நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலையின் இரு புறங்களிலும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com