திருப்பத்தூர் அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி

ஆலங்காயத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.காவாபட்டறை அருகே பஸ் வரும்போது எதிரே பைக்கில் வந்த அருள்குமார், பிரவீன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இறந்த பிரவீன், அருள்குமார்.
இறந்த பிரவீன், அருள்குமார்.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த முல்லை நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ் என்பவரது மகன் பிரவீன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள்குமார் (24). இருவரும் நண்பர்கள். திருப்பத்தூரில் யோகா பயிற்சி பெற்று வந்தனர்.

வாலிபர்கள் 2 பேரும் தினமும் பைக்கில் யோகா பயிற்சி மையத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல யோகா பயிற்சி மையத்துக்கு பிரவீனும், அருள்குமாரும் பைக்கில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

ஆலங்காயத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

காவாபட்டறை அருகே பஸ் வரும்போது எதிரே பைக்கில் வந்த அருள்குமார், பிரவீன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருள்குமார், பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் போக்குவரத்தை சீர் செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com