ஆசிரியர் தின வாழ்த்தில் பாரதம் என குறிப்பிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.
ஆசிரியர் தின வாழ்த்தில் பாரதம் என குறிப்பிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 'பாரதம்' என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com