நண்பர்கள் தினத்தை புதுமையாக கொண்டாடிய ஜொமோட்டோ தலைமை அதிகாரி

ஜொமோட்டோ நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல் புதுமையான முறையில் கொண்டாடி உள்ளார். பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நண்பர்கள் தினத்தை புதுமையாக கொண்டாடிய ஜொமோட்டோ தலைமை அதிகாரி
Published on

நண்பர்கள் தினத்தை ஒவ்வொருவரும் வித்தியாசமாக கொண்டாடிய நிலையில், ஜொமோட்டோ நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல் புதுமையான முறையில் கொண்டாடி உள்ளார்.

அதாவது தனது நிறுவனத்தின் 'டி-சர்ட்டை' அணிந்து கொண்டு அவர் தனது பைக்கில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் தனது நிறுவன ஊழியர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கும் நண்பர்கள் தினத்தையொட்டி அது தொடர்பான வாசகங்கள் இடம் பெற்றிருக்கும் ரப்பர் பிரேஸ்லெட் வழங்கி மகிழ்வித்தார். அவரது இந்த பதிவு டுவிட்டரில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com