சென்னை- தூத்துக்குடிக்கு விமான சேவை தொடக்கம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது.64 பயணிகளுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டுள்ளது.
சென்னை- தூத்துக்குடிக்கு விமான சேவை தொடக்கம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இப்போது மழை குறைந்த நிலையில் வெள்ளமும் வடியத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளம் வடிந்த நிலையில் விமான சேவை தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com