கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை கிடு கிடு உயர்வு

பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை கிடு கிடு உயர்வு
Published on

கடலூர்:

கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வரத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

வழக்கமாக கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 200 ரூபாய்க்கும், நண்டு கிலோ 300 ரூபாய்க்கும், சிறிய வகை இறால் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் 400 ரூபாய்க்கும், பாறை 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com