என்ஜினீயரிங் கலந்தாய்வு- 20 ஆயிரம் மாணவர்கள் கல்லூரியில் சேர இன்று மாலை வரை அவகாசம்

விரும்பிய இடங்கள், கல்லூரிகளில் சேர கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு இன்று கடைசி நாளாகும்.இன்று மாலை வரை கல்லூரியில் சேர இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சேர முடியாது.
என்ஜினீயரிங் கலந்தாய்வு- 20 ஆயிரம் மாணவர்கள் கல்லூரியில் சேர இன்று மாலை வரை அவகாசம்
Published on

சென்னை:

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது. கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடந்து வருகிறது.

கடந்த மாதம் 10-ந்தேதி முதல் சுற்று தொடங்கியது. அதன் மூலம் 10,500 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 2-வது சுற்று கடந்த 25-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடந்தது.

இடங்களை தேர்வு செய்து ஒதுக்கீட்டு கடிதம் பெற்ற 20,735 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு 7 வேலை நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டன. ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற விடுமுறை காரணமாக மாணவர்கள் சேர முடியாமல் இருந்தனர்.

இந்த நிலையில் விரும்பிய இடங்கள், கல்லூரிகளில் சேர கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு இன்று கடைசி நாளாகும்.

இன்று மாலை வரை கல்லூரியில் சேர இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சேர முடியாது. அந்த இடங்கள் காலியானதாக கருதப்பட்டு 3-வது சுற்றில் சேர்க்கப்படும்.

அந்த வகையில் 14,153 பேர் சுயநிதி கல்லூரியில் சேரவும் 5,016 பேர் சேவை மையங்களில் சேரவும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 1,324 பேர் அரசு பொறியியல் கல்லூரிகளிலும், 242 பேர் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் இன்று வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு 13-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. பி.ஆர்க் மாணவர்களுக்கு உத்தேச ஒதுக்கீட்டு கடிதம் இன்று வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com