அளவுக்கு அதிகமான போதையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பலி

அளவுக்கு அதிகமான போதையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பலி
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பலி
Published on

கொடைக்கானல்:

தஞ்சாவூர் மாவட்டம் என்.வீ.குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ரேவந்த் (வயது 27). என்ஜினீயரான இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கூக்கால் ஏரி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினார்.

அப்போது ரேவந்த் உள்பட அவரது நண்பர்கள் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளதாக தெரிகிறது. காலையில் ரேவந்தை பார்த்த போது காணவில்லை. விடுதியின் குளியல் அறையில் அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அளவுக்கு அதிகமாக போதை மற்றும் கடும் குளிர் காரணமாக மூச்சு விட முடியாமல் ரேவந்த் இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுற்றுலா வந்த இடத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com