நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாட்டிற்கு ஏற்றுமதிக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்ட ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.106 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.77 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com