சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் வழிபட 4 நாட்களுக்கு பிறகு அனுமதி

கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனக சபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் வழிபட 4 நாட்களுக்கு பிறகு அனுமதி
Published on

சிதம்பரம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 2 முறை நடைபெறும் விழாக்களின் போது மூலவர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறையால் 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கமாகும்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனக சபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையினர் கடநத 24-ந்தேதி கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக 10 தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் முடிந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்றவுடன், தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கனக சபை மீது பக்தர்கள் இன்று காலை முதல் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com