வேளச்சேரி மருத்துவமனையில் தீபாவுக்கு குழந்தை பிறந்தது

இன்னும் சில தினங்களில் என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை வெளிப்படையாகவே நானும், எனது கணவரும் அறிவிக்க உள்ளோம்.பல ஆண்டு போராட்டத்துக்கு பிறகு குழந்தை பிறந்து உள்ளதால் அதனை கவனமாக வளர்க்க வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருக்கிறோம்.
வேளச்சேரி மருத்துவமனையில் தீபாவுக்கு குழந்தை பிறந்தது
Published on

சென்னை:

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா-மாதவன் தம்பதிக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதற்காக இருவரும் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தீபாவுக்கு வாடகை தாய் மூலமாக சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இருப்பதாக இன்று காலை தகவல்கள் பரபரப்பாக வெளியானது.

இது தொடர்பாக தீபாவை தொடர்பு கொண்டு கேட்டபோது குழந்தை பிறந்து இருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் அந்த குழந்தை எப்படி பிறந்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க தயங்கினார்.

5 வருட சிகிச்சைக்கு பிறகு தற்போது எனக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. இதற்கு முன்பு பலமுறை கருத்தரித்த நிலையிலும் அப்போது குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் இருந்தன. இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாமல் இருந்தது.

தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்து இருக்கிறது. நானும், குழந்தையும் மருத்துவமனையில்தான் அவசர சிகிச்சையில் உள்ளோம்.

இன்னும் சில தினங்களில் என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை வெளிப்படையாகவே நானும், எனது கணவரும் அறிவிக்க உள்ளோம். பல ஆண்டு போராட்டத்துக்கு பிறகு குழந்தை பிறந்து உள்ளதால் அதனை கவனமாக வளர்க்க வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருக்கிறோம்.

எனக்கும், எனது கணவருக்கும் தனிப்பட்ட முறையில் பல்வேறு மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. எங்களது உறவினர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு குழந்தை பிறந்தது தொடர்பான தகவலை நானே தெரிவிப்பேன்.

இது தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்.

இவ்வாறு தீபா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com