கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை

இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்கு பதிவு செய்த போலீசார் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமரவேல் (வயது 32). பால் வண்டி டிரைவர். இவரது மனைவி மீனா (20). இருவரும் வீட்டின் மாடியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லை. வேலைக்கு சென்று நேற்று இரவு 10 மணிக்கு குமரவேல் வீடு திரும்பினார். பின்னர் குமரவேல் மற்றும் அவரது மனைவி இருவரும் உறங்க சென்றனர்.

இன்று காலை வெகுநேரமாகியும் குமரவேலும், மீனாவும் வெளியில் வராததால், அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டியும் அவர்கள் வெளியில் வரதாதால், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தால் இந்த துயர முடிவை கணவன், மனைவி இருவரும் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com