சென்னையில் வரும் 7-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மெகா தடுப்பூசி முகாம்.பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சென்னையில் வரும் 7-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்
Published on

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com