பெரியார் பல்கலை. தேர்வில் சாதி குறித்த கேள்வியால் சர்ச்சை

வினாத்தாள் பிற பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாக விளக்கம்.பெரியார் பல்கலைக்கழகத்திலேயே சாதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியார் பல்கலை. தேர்வில் சாதி குறித்த கேள்வியால் சர்ச்சை
Published on

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், வினாத்தாள் பிற பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பெரியார் பல்கலைக்கழகத்திலேயே சாதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com