கோவை சுல்தான்பேட்டை அருகே முதியவரை அரிவாள்மனையால் வெட்டிக் கொன்ற மகன்

தந்தை- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சுல்தான்பேட்டை அருகே முதியவரை அரிவாள்மனையால் வெட்டிக் கொன்ற மகன்
Published on

கோவை:

கோவை சுல்தான்பேட்டை அருகே உள்ள செந்தேரிபுதூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 90). கூலித் தொழிலாளி. இவரது மகன் முருகேஷ் (50). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். அவரை கோபால்சாமி பராமரித்து வந்தார்.

தந்தை- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது கோபால்சாமிக்கும், அவரது மகன் முருகேசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேஷ் தனது தந்தை கோபால்சாமியை வீட்டில் இருந்த அரிவாள் மனையால் வெட்டி கொலை செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் முருகேஷ் எதுவும் தெரியாதது போல வீட்டில் படுத்து தூங்கினார்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோபால்சாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகேஷ் அவரது தந்தையை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட கோபால்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com