2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்- சென்னை கலெக்டர் அறிவிப்பு

தனித்தன்மைக் கொண்ட விளையாட்டில் சாதனை புரிந்த நபர்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க வருகிற 28-ந்தேதி கடைசி நாாகும்.
2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்- சென்னை கலெக்டர் அறிவிப்பு
Published on

சென்னை:

2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அனுசுயாதேவி (பொறுப்பு) அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல்,பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தைச் சார்ந்த கீழ்க்காணும் தகுதிகள் உடைய தனித்தன்மைக் கொண்ட விளையாட்டில் சாதனை புரிந்த நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

பத்ம விருதிற்கு awards.gov.in, padmaawards.gov.in ஆகிய இணைய தள முகவரியில் வண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 28-ந்தேதி கடைசி நாாகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை அலுவலக நேரங்களில் 7401703480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com