விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து 20-ந்தேதி வரை ரத்து

கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்
தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்
Published on

கன்னியாகுமரி:

சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரைக்கு செல்ல தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு செல்ல இன்றும் போலீசார் தடை விதித்தனர்.

கடற்கரைக்கு செல்லும் பாதைகளும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டு இருந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு இன்று 4-வது நாளாக செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் இன்று குறைந்தளவு சுற்றுலா பயணிகளே கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர்.

அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு இன்றும் தொடர்ந்து படகு போக்குவரத்து 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டு இருந்தது.

கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். படகு போக்குவரத்து வருகிற 20-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதேபோல குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com