

ராமேசுவரம்:
ராமேசுவரத்திற்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வருகை தந்தார். நேற்று அக்னி தீர்த்த கடல், 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிய அவர் கோவிலில் ராமநாதசுவாமி-பர்வ தவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
முன்னதாக ராமேசுவரம் வருகை தந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் ராமேசுவரம் ராமர் தீர்த்தம் வடக்கு பகுதியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் தூய்மைபணி மேற்கொண்டார்.
இதில், மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, மாவட்டத்தலைவர் தரணி ஆர்.முருகேசன், மாவட்ட பார்வையாளர் கே.முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், தமிழ் இலக்கிய மாவட்ட தலைவர் ஆறுமுக லிங்கம், ராணுவ பிரிவு மாவட்டத்த லைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.