நடராஜர் கோவிலில் சிவபக்தரை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும்- சிதம்பரத்தில் பரபரப்பு சுவரொட்டி

கோவில் தீட்சிதர்கள் சிலர் கார் வண்ணனை நெட்டி தள்ளி தாக்கி உள்ளனர். கார் வண்ணன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்து இருந்தார்.
நடராஜர் கோவிலில் சிவபக்தரை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும்- சிதம்பரத்தில் பரபரப்பு சுவரொட்டி
Published on

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை அடுத்துள்ள சிவபுரியை சேர்ந்தவர் கார் வண்ணன். சிவ பக்தர்.

இவர் கடந்த 21-ந் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள 21 படிக்கட்டு அருகே சென்று கொண்டிருந்த போது கோவில் தீட்சிதர்களுக்கும் கார்வண்ணனுக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவில் தீட்சிதர்கள் சிலர் கார் வண்ணனை நெட்டி தள்ளி தாக்கி உள்ளனர். இது குறித்து கார் வண்ணன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்து இருந்தார்.

இந்த நிலையில் சிதம்பரம் பஸ் நிலையம் மற்றும் நகர் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அதில் சிவபுரி பகுதியை சேர்ந்த பக்தர் கார் வண்ணன் சாமி தரிசனம் செய்ய சென்றபோது தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com