மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ராணுவ வீரர் கைது

குழித்துறை அருகே மாணவியை ஆபாசமாக படம் எடுத்தி மிரட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் சஜித்
கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் சஜித்
Published on

குழித்துறை:

குழித்துறையை அடுத்த இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

இந்த மாணவி ஓய்வு நேரத்தில் மாதச்சீட்டு நடத்தி வந்தார். இதில் அவருக்கு பண நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 2021 டிசம்பர் மாதம் அப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சஜித் (வயது 30) என்பவரிடம் உதவி கேட்டார். அந்த நபர் மாணவிக்கு பண உதவி செய்வதாக உறுதி அளித்தார்.

இதற்காக அடிக்கடி மாணவியுடன் செல்போனில் பேசினார். மாணவியுடன் நெருக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இருவரும் வாட்ஸ்-அப்பிலும் பேசத் தொடங்கினர்.

அப்போது மாணவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மாணவியை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த படத்தை காட்டி சஜித் மிரட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் சஜித் மாணவியின் ஆபாச படங்களை நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். அவர்களும் மாணவியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவி இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் மாணவி கொடுத்த புகாரின் பேரில் ராணுவ வீரர் சஜித், ஜாண் பிரிட்டோ (33) ராணுவ வீரர், கிரீஷ் (29), லிபின் ஜான் (32) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜாண் பிரிட்டோ, லிபின் ஜான் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான ராணுவ வீரர்கள் சஜித் மற்றும் கிரீஷ் ஆகியோரை தேடிவந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராணுவவீரர் சஜித் (30) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com