வேலூர் அருகே காதலியை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுவத்த ராணுவ வீரர் கைது

காதலியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
ராணுவ வீரர் கைது
ராணுவ வீரர் கைது
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம் அல்லிவரம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் அஜித்குமார் (வயது 25).ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் சாத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அடிக்கடி காதலியை தனிமையில் சந்தித்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவரிடம் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த அஜித்குமார் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது மேலும் இது குறித்து வெளியே சொன்னால் வெட்டி புதைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அஜித் குமாரை கைது செய்து நேற்று வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com