சேலம் அருகே மதுபோதையில் தனது வீட்டிற்கு தானே தீ வைத்த டிரைவர்

தனியாக வசித்து வந்த தமிழரசன், மதுபோதையில் தான் குடியிருந்த வீட்டுக்கு தானே தீ வைத்தார்.வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
சேலம் அருகே மதுபோதையில் தனது வீட்டிற்கு தானே தீ வைத்த டிரைவர்
Published on

பனமரத்துப்பட்டி:

சேலம் மாட்டம் மல்லூர் பேரூராட்டசி கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 33). இவருடைய மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தமிழரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இதனால் நந்தினி, கணவருடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த தமிழரசன், மதுபோதையில் தான் குடியிருந்த வீட்டுக்கு தானே தீ வைத்தார்.

இதில் வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com