ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: நடுரோட்டில் அடித்து முட்டி போட வைத்ததால் கொன்றோம்- கைதான 3 வாலிபர்கள் வாக்குமூலம்

மர்ம நபர்கள் விடியலை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.பழிவாங்க கபில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: நடுரோட்டில் அடித்து முட்டி போட வைத்ததால் கொன்றோம்- கைதான 3 வாலிபர்கள் வாக்குமூலம்
Published on

அம்பத்தூர்:

அம்பத்தூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் விடியல் (வயது30). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஆண்டு சதிஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தார்.

நேற்று இரவு விடியல், தனது ஆட்டோவில் வீட்டின் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விடியலை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரிஷி, சுர்ஜித், கபில் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் நேற்று முன்தினம் கபில் கருப்பு நிற வேஷ்டி அணிந்து சென்று உள்ளார். இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் விடியல் கபிலிடம் தகராறில் ஈடுபட்டார். நீ என்ன பெரிய ரவுடியா, கருப்பு நிற வேட்டி அணிந்து செல்கிறாய் என்று கூறி கபிலை அடித்து நடுரோட்டில் முட்டி போட வைத்ததாக தெரிகிறது.

இதற்கு பழிவாங்க கபில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com