அடையாறு ஆற்றில் மூழ்கிய சிறுவன் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மற்றும் ரப்பர் படகு மூலம் இன்று 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதடல் பணி நடைபெற்றது.
அடையாறு ஆற்றில் மூழ்கிய சிறுவன் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு
Published on

சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் நேற்று மாயமானான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மற்றும் ரப்பர் படகு மூலம் இன்று 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் 18 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com