நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசுக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு

அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோசி இத்திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாமல் கைவிடப்படுகின்றது என்று அறிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசுக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
Published on

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. நிலக்கரி சுரங்கம் அமைந்தால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக மக்களின் உணர்விற்கு மதிப்பளித்து பிரதமர் மோடி இத்திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில், மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோசி இத்திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாமல் கைவிடப்படுகின்றது என்று அறிவித்துள்ளார்.

இந்த இனிய செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ள பிரதமருக்கும், மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோசிக்கும் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com