ஆசைநாயகிக்கு பல லட்சம் ரூபாய் சொத்துக்கள் எழுதி வைத்த 90 வயது முதியவர்- மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர்

கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் தள்ளாத வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம். கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஆசைநாயகிக்கு பல லட்சம் ரூபாய் சொத்துக்கள் எழுதி வைத்த 90 வயது முதியவர்- மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டேனீஸ்பேட்டை பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 90). இவருடைய மனைவி பொன்னம்மாள் ( 82).

இவர், தன்னுடைய மகள் கமலா (60) என்பவருடன் கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் பழனியப்பனுக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டாார்.

எனது கணவர் ஏற்கனவே குப்பாயி (70) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த தொடர்பை கைவிடுமாறு நாங்கள் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

தற்போது 3-வதாக பழனியம்மாள் (70) என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். எங்களுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை கணவர், ஆசைநாயகி பழனியம்மாளுக்கு எழுதி வைத்துள்ளார்.

மேலும், நாங்கள் பேரனுடன் வசித்து வந்த வீட்டை இடித்து விட்டு எங்களை மிரட்டுகிறார்.

கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் இந்த வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம். கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அவர் அதில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com