தருமபுரியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் தங்க நகைகள் திருட்டு

நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் தங்க நகைகள் திருட்டு
Published on

தருமபுரி:

தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள எல்.ஆர்.மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சிவராம கிருஷ்ணன். இவர் ஓய்வுபெற்ற விலங்கியல் நிபுணர் ஆவார். இவரது மனைவி சாய் சரோஜா. இவர் அரசு பள்ளியில் உதவி உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சிவராமகிருஷ்ணன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் அவர்கள் கர்நாடாக மாநிலம் மைசூருவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இன்று திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்த போது, சிவராமகிருஷ்ணன் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், டிஎஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

இதேபோல் சிவராமகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியரான சிவக்குமார் என்பவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, சிவக்குமார் திருமணம் நிகழ்ச்சிக்காக மைசூருக்கு சென்று உள்ளதாலும், அவரது வீட்டில் இருந்து தங்க நகைகளை சிவக்குமார் குடும்பத்தினர் எடுத்து சென்றதாலும், கொள்ளையர்களுக்கு எதுவும் கிடைக்காததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.

மேலும், சிவக்குமார் மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில் நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி நகர் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com