5 வந்தே பாரத் ரெயில்கள் தயாராக உள்ளன... இயக்கப்படும் வழித்தடம் விரைவில் தெரியும்

3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன.
Vande Bharat Train
Published on

சென்னை:

அதி நவீன சொகுசு மற்றும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலான வந்தே பாரத் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழகத்திலும் 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

2018 முதல் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரித்து வரும் ஐ.சி.எப். இதுவரையில் 70 ரெயில்களை தயாரித்து உள்ளது. 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் சுமார் 75 ஆயிரம் பெட்டிகளை தயாரித்துள்ளது.

இந்த நிதியாண்டில் 1,536 எல்.எச்.பி. பெட்டிகள் மற்றும் 650-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் உட்பட 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

தற்போது 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கு பெட்டிகள் தயாராக உள்ளன. அவற்றை விரைவில் இயக்கவும் எந்த நகரங்களுக்கு அவை செல்கிறது என்பதும் ரெயில்வே வாரியம் தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 பெட்டிகளை கொண்ட இந்த ஆரஞ்சு நிற ரெயில்களின் இறுதி ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுபற்றி ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களை ரெயில்வே வாரியம் முடிவு செய்யும்.

தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன. எதிர் காலத்தில் 20 மற்றும் 24 பெட்டிகளுடன் இயக்கப்படும். வந்தே பாரத் மெட்ரோவின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com