திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.68 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவர் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.68 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

கே.கே. நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவர் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து ரூ.66.68 லட்சம் மதிப்பிலான 1061 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி விமான நிலைய பகுதியில் பரபரப்பு நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com