கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது- ஆளுநர் அர்லேகர்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
TN Governor Arlenkar
Published on: 

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றியதாவது:-

ஓசூர் விமான நிலையம் கட்ட அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் ஆட்சி இருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது.

முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது முதல் முதலமைச்சர் மாநிலத்தின் நிதி நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுத்து உள்ளார்.

தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை சுமார் 78ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நிதி வருவாய் முந்தையை நிதி ஆண்டுகளை விட குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com