சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு: அகிலேஷ் யாதவ் அதிரடி நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலத்தின் வலுவான கட்சியாக சமாஜ்வாடி திகழ்ந்து வருகிறது.பல மாநிலங்களில் சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருவதால் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு: அகிலேஷ் யாதவ் அதிரடி நடவடிக்கை
Published on

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னணி கட்சியாக சமாஜ்வாடி கட்சி இருந்து வருகிறது. இந்த கட்சி உத்தரகாண்ட், மத்தயி பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் இந்த கட்சி தேசிய கட்சியாக கருதப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார்.

சமாஜ்வாடி கட்சிக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் அக்கட்சிக்கு அமைப்புகள் உள்ளன. இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவின் அறிவுறுத்தலின்படி தலைவர் பதவி உள்பட தமிழ்நாடு பிரிவு கலைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்படடுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com