6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
Published on

தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு, இடமாற்றம் செய்யப்பட்டு, ஆர். செல்வராஜ்க்குப் பதிலாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செல்வராஜ் பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசின் சிறப்புச் செயலாளராக இருந்த சந்தீப் நந்தூரி, இடமாற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட சஜ்ஜன்சிங் ஆர். சவான்க்குப் பதிலாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக இருக்கும் பி. உமா மகேஸ்வரி, இடமாற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட மகேஸ்வரி ரவிகுமாருக்குப் பதிலாக, கைத்தறித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பேரூராட்சிகள் துறை இயக்குநராக இருந்த பிரதீப் குமார், எஸ். சுரேஷ் குமாருக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசின் துணைச் செயலாளராக இருக்கும் அழகுமீனா, இடமாற்றம் செய்யப்பட்டு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக இருக்கும் டாக்டர் ஆர். சுரேஷ் குமார், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக இருக்கும் சித்ரா விஜயன், சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com