

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
* மாநிலத்தின் பொதுத்துறைகளில் 3.18 லட்சம் கோடி ரூபாய் மறைமுக ஆஃப் பட்ஜெட் பொறுப்புகள் உள்ளன. இதனால் மாநிலத்தன் மொத்த கடன் 13.18 லட்சம் கோடி ரூபாய்.
* தமிழ்நாடு மின்வாரியக் குழுமத்தின் திரண்ட இழப்பு 1.82 லட்சம் கோடி ரூபாய்.
* தமிழ்நாடு மின்வாரியக் குழுமத்தின் கடன் 2.47 கோடி ரூபாய்.
* கடைசி 5 வருடங்கள் இயங்க 1.45 லட்சம் கோடி ரூபாய் பொது நிதியை அரசு வழங்கியுள்ளது.
* போக்குவரத்து துறை 74.6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. ஒரு கி.மீட்டருக்கு 78.81 ரூபாய் செலவு. வருவாயாக கிடைப்பது 25 ரூபாய் மட்டுமே.