செப்டம்பர் 8ம் தேதி வரை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

ஆகஸ்டு 12ம் தேதி பட்ஜெட் மீதான பதிலுரை அளிக்கப்படும்.
TN Speaker JCD Prabhakar
Published on

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.

காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்பதை தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியிருப்பதாவது:-

தமிழக வேளாண் பட்ஜெட் நாளை சட்டமன்றத்தில் நடைபெறும். வரும் ஆகஸ்டு 7ம் தேதி (நாளை மறுநாள்) முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 8,9ம் தேதிகள் அரசு விடுமுறை, ஆகஸ்டு 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் தொடரும். காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டம் தொடங்கும். தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை நடைபெறும்.

ஆகஸ்டு 12ம் தேதி பட்ஜெட் மீதான பதிலுரை அளிக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரின் நாட்களை அதிகரிக்க திமுக, பாமக கோரியாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி தான் தொடர்கிறது. ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை தொடர்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com