அண்ணனின் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு

தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் நாளை தாக்கல் செய்கிறார்.
Minister Maria Wilson
Published on

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார்.

இதில், அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று அரசு அமைத்ததை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது.

இதைதொடர்ந்து, தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் நாளை தாக்கல் செய்கிறார்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

அதன் பிறகு, அந்தந்த நாட்களில் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளும் அவற்றின் மீதான விவாதங்களும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com