

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தற்போது பதிவேடுகளில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட வேண்டியதுள்ளது. அதை பயோமெட்ரிக் முறையில் நவீனப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், பயோமெட்ரிக் முறை ஆய்வில் உள்ளது. விரைவில் அது அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பின்னர் பேசிய பிரேமலதா, அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் தரப்படுகிறது.
பாதுகாப்பான நீரை பெறுவதற்காக அனைவருக்கும் பாட்டிலில் தண்ணீர் தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டேன். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் (தி.மு.க. எம்.எல்.ஏ.) தடை போடுகிறார் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் தடை போடவில்லை. அவர் கேட்பதை கொடுத்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.