வாணியம்பாடியில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ரவிக்குமார் மளிகை கடை நடத்தி வந்தார். வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு மூட நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
வாணியம்பாடியில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ரவிக்குமார் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார். அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு மூட நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதி முழுவதும் தூய்மை பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com