

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை கடந்த 5-ந்தேதி 'We The Leaders' என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்தில் 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேரும், 3 நாட்களில் 15.43 லட்சம் பேரும் இணையதளத்தின் மூலம் இணைந்துள்ளனர். அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிய இயக்கத்தை அறிவித்த பின்னர் முதல்முறையாக கோவை விமான நிலையத்திற்கு வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் திரண்ட அவரது தொண்டர்கள் 'We the Leader' என்று கோஷமிட்டு, அவருக்கு பொன்னாடை போர்த்தியும், கை குலுக்கியும் வரவேற்பு அளித்தனர்.